https://www.facebook.com/share/v/1YcbgED5k7
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தி.மு.க சார்பில், கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள், 157 ஊராட்சிகள், 3 நகராட்சிகளில் 21 வார்டுகள், 8 பேரூராட்சிகளில் 24 இடங்கள் என மொத்தம் 250 இடங்களில் விளையாட்டு திருவிழா நடைபெற்றது. முதல் பரிசு பெற்றவர்களுக்கு, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட திமுக செயலாளர், அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.