ஜூலை.11.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தஞ்சைக் கோட்டத்தின் துணைத் தலைவர் கணேசன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர். நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றிப் பெற்றதற்கு வாழ்த்துகளை கூறியதோடு இன்சூரன்ஸ் துறை தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்து மனு அளித்தனர்.
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு தொகைக்கு ஜி.எஸ்.டி தொகையை நீக்கவும், மக்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்திய பழைய வருமானவரி சட்டத்தில் இருந்த 80 சி பிரிவுக்கு, புதிய வருமானவரி சட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தியும், கொரானா காலத்திற்கு பிறகு பெருகிவரும் எதிர்பாரா மருத்துவ செலவுகளை சமாளிப்பதற்கு மருத்துவ காப்பீடு தேவைப்படும் சூழலில் அதற்கான பிரீமியத்தொகைக்கு முழு வருமானவரி விலக்கு அளிக்கும் பிரிவு 80 டிடிபி யை புதிய வருமானவரி சட்டத்தில் இணைக்க கோரியும் மற்றும் பொதுகாப்பீட்டில் உள்ள நான்கு பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிணைக்க கோரியும் மனு அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது கரூர் 1 கிளையின் செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் கரூர் 2 கிளையின் தலைவர் பெருமாள், செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் அருணகிரி, சிவராமகிருஷ்ணன், முத்துக்குமார், தியாகராஜன், இளங்கோ, கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ராஜா, பால பிரபு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.