செப்.28.
தேசிய பங்குச் சந்தையில் 5 லட்சம் கோடி முறைகேடு தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக என்எஸ்சிபி வழங்கும் கோலிசன் என்ற பிரத்தியேக வசதி மூலம் என்எஸ்இ கணினி சேமிப்பகத்தில் விரைவாக உள்நுழைந்து முறைகேடு செய்ய உதவியதாக புகார் எழுந்தது. பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் ஆன என்எஸ்சி அதிகாரிகள் துணையோடு பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதாகவும் இதன் மூலம் பெரும் லாபம் ஈட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
ரூ.5லட்சம் கோடி. சுருட்டியற்கு உடந்தை
ரூ.5லட்சம் கோடிக்கு முறைகேடு நடைபெற சித்ரா உடந்தையாக இருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து என்எஸ்இ முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை மார்ச் 6ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இதைத் தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஏழாம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பில் எ.ன்எஸ்சி இணை இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது லொகேஷன் வசதி அமலுக்கு வந்தது. அதன்பிறகு தலைமைச் செயல் அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். மேலும் இருவரை சித்ரா நியமனம் செய்தார். இந்த நியமனத்துக்கு பிறகு 300 வர்த்தக நாள்களுக்கும் மேலாக ஜிபி விஜிபி செக்யூரிட்டி நிறுவனம் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டது . இதன் மூலம் முறையற்ற லாபம் ஈட்டட்டிருக்கிறது . இது செபி விதிகளுக்கு எதிரானது. சித்ரா ராமகிருஷ்ணா பொறுப்பேற்ற பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுப்பதை எக்காரணமும் இன்றி நிறுத்தி விட்டார். என்எஸ்சி துணை நிறுவனமான என்எஸ் தலைமை தொழில்நுட்ப அதிகாரி முரளிதரன் நடராஜனிடம் தேசிய பங்குச் சந்தையில் கோலிசன் கூட்டம் கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பு இருந்தது . அவர் சித்ரா ராமகிருஷ்ணன் கீழ் பணியாற்றி வந்தவர். இன்போடெக் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திற்கும் அஜய் சா என்ற நபருக்கும் வர்த்தக தகவல் கிடைக்க சித்ரா ஏற்பாடு செய்தார். தனது பதவியை தவறாக பயன்படுத்தி இதனைச் செய்துள்ளார்.
சித்ரா ராமகிருஷ்ணா ஜாமீன் கோரி டெல்லி உயர் நதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் சித்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.