பிப். 22.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்ற திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் .ஜி.பாலு
இல்லத் திருமண விழாவில் பேசுகையில்,
பயிர் பாதிப்பு குறித்து அதிகாரிகளோடு, பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்களுக்கு நீங்கள் உடனடியாக செல்லவேண்டும் என்று உத்தரவிட்டு, உடனடியாக இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பாதிக்கப்பட்ட இடங்களை எல்லாம் சென்று அமைச்சர்கள் பார்த்தார்கள், விவசாயிகளிடத்தில் பேசினார்கள். நிவாரணம் என்ன வேண்டும் என்பதை பற்றி ஆய்வு நடத்தினார்கள். அதற்கு பிறகு நான் ஒன்றிய அரசுக்கு நாம் முறையாக கடிதம் எழுதினோம். இப்போது என்ன நிலை? கணக்கெடுக்கக்கூடிய பணி தொடர்ந்து நடைபெற்று இப்போது data entry செய்ய தொடங்கிவிட்டார்கள். இப்போது சொல்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில், அந்த நிவாரணத் தொகை உங்கள் வங்கியில், உடனடியாக வரவு வைக்கப்படும் என்று உறுதியோடு நான் சொல் விரும்புகிறேன்.
எதற்காக நான் இதையெல்லாம் சொல்கிறேன் என்று கேட்டால், எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, தேர்தல் நேரத்தில் சொன்னதையெல்லாம் நிறைவேற்றவில்லை. நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். எதை நிறைவேற்றவில்லை. ஒன்று, இரண்டு நிறைவேற்றாமல் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை. நிதி பற்றாக்குறை, நிதி மட்டும் முறையாக இருந்திருந்தால், அதை ஒழுங்காக நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட்டு, அதை ஒழுங்காக நீங்கள் சேர்த்து வைத்திருந்தால், கஜானாவில் நிதியை வைத்திருந்தால், நாங்கள் இந்நேரம் அதையும் நிறைவேற்றி இருப்போம்.
ஆனால் கஜானாவையே காலியாக்கிவிட்டு பெரிய கடனாளியாக நீங்கள் சென்ற காரணத்தினால்தான் அதையும் சமாளிப்பதற்கு நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அதையெல்லாம் நாங்கள் சமாளித்து, ஓரளவிற்கு ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறோம். 85 சதவீத பணியை நிறைவேற்றிவிட்டோம் என்று நான் தொடர்ந்து சொல்கிறேன். மிச்சம் இருக்கக்கூடிய அந்த 15 சதவீத. பணிகளையும் விரைவில் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கையை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, அந்த நம்பிக்கையோடு நீங்கள் இருங்கள், அந்த நம்பிக்கையோடு நீங்கள் எப்போதும் இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.