டிச.12.
சென்னை கலைவாணர் அரங்கில் அயலக தமிழர் தினம் 2023 , விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் வெளியிட்ட அறிவிப்புகள்-
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பர். அதேபோல் அயலகத்தில் குடியேறி வரும் தமிழர்கள் அங்கே பணிபுரியும் இடத்தில் சிரமத்திற்கும் ஏமாற்றத்திற்கு உள்ளாக கூடிய சில நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் வருகிறது. 2010 ல் அயலகத் தமிழர் நலம் காத்திட முதல்வர் கலைஞர் ஒரு துறையை உருவாக்கிட முனைந்தார். எப்படி உங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடைவெளி உள்ளதோ அதுபோல் திமுக அரசு மீண்டும் அமைவதற்கு ஒரு பத்தாண்டு கால இடைவெளி ஏற்பட்டு விட்டது.
2021 ஆம் ஆண்டு வெற்றி பெற்று அரசு அமைந்து தனியே ஒரு அமைச்சகத்தை உருவாக்கி அமைச்சரையும் இந்த அரசு நியமித்துள்ளது. சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற கலைஞரின் வழியிலான அரசு இது.
1) தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் வாழ்ந்து வரும் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும்.
2) புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள் இளம் மாணவர்கள் தாய் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம் ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும்.
3) அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிர்பாராத விதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
4) அயல் நாடுகளுக்கு செல்லோர் உரித்த தரவு தளம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்றார்.
விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏ, டிஆர்பி. ராஜா, மலேசிய அமைச்சர் சிவகுமார் வரதராஜ், இலங்கை அமைச்சர் அரவிந்தகுமார், டயானா நாட்டு ஆளுநர் சுசீந்திரன், முன்னாள் பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரேசியஸ் நாட்டு முன்னாள் அமைச்சர் டாக்டர் பரமசிவம், இலங்கை முன்னாள் முதலமைச்சர் செந்தில், மலேசிய முன்னாள் அமைச்சர் சரவணன், இலங்கை எம்பிக்கள் சுமன், மனோ, ரிவர்டன் ஆஸ்திரேலியா உறுப்பினர் ஜெகதீஷ், சிங்கப்பூர் எம்பி தினகரன், துபாய் டெக்கான் குழும தலைவர் லட்சுமணன், அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவ சேனாபதி, அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு , மறுவாழ்வுத்துறை செயலாளர் முனைவர் ஜெகநாதன், ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.