டிச.9.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர செயல்பாட்டு மையத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக கனமழை பெய்து வருவதையொட்டி, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் இருந்து விழுப்புரத்தில் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். முகாம்களில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ்எஸ்ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.