பிப்.1..
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்-
பழைய வரிமுறையில் வரி விகிதங்களில் மாற்றம் இல்லை
தனிநபருக்கான பழைய வரி நடைமுறையில் ஏற்கனவே உள்ள 5 லட்சம் ரூபாய் என்ற உச்சவரம்பு 7 லட்சமாக அதிகரிப்பு.
தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு விலக்கு 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சமாக அதிகரிப்பு. புதிய வருமான வரி திட்டத்தின்கீழ் ரூ. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள தனிநபருக்கு வருமான வரி இல்லை.
தனிநபர் வருமான வரி படி நிலைகளில் பெரும் மாற்றம்
. 3 லட்சம் வரை வரி இல்லை
ரூ. 3-6 லட்சம் வரை 5 சதவீதம்
ரூ. 6-9 லட்சம் வரை 10 சதவீதம்
ரூ. 9-12 லட்சம் வரை 15 சதவீதம்
ரூ. 12-15 லட்சம் வரை 20 சதவீதம்
ரூ. 15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம்.
தங்கம் வெள்ளி வைரம் ஆகியவைகளின் விலைகள் மேலும் உயர வாய்ப்பு. குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீது 16 சதவீதம் பேரிடர் மேலாண்மை வரி விதிப்பு மகளிருக்கான சேமிப்பு திட்டம் மார்ச் 2025 வரை நடைமுறைப்படுத்தப்படும். திருத்தி அமைக்கப்பட்ட நிதி பற்றாக்குறை 6.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது கர்நாடகா மாநிலத்திற்கு ரூ.5,300 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும். ரூ.9000 கோடி தொகுப்பு நிதி சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.. கால்நடை வளர்ப்பு பால்வளம் மீன்வளம் ஆகியவற்றில் விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
ஜவுளி மற்றும் வேளாண் பொருட்களைத் தவிர இதர பொருட்கள் காண அடிப்படை இறக்குமதி வரி 21 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக குறைப்பு. மாநிலங்களுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.5% அளவிற்கு பற்றாக்குறை பராமரிக்க அனுமதி. இது 2024-26 ஆண்டுகளில் 5% வரை பராமரிக்க அனுமதி.
மூத்த குடிமக்களுக்கான உச்சபட்ச டெபாசிட் 15 லட்சத்திலிருந்து 30 லட்சமாக அதிகரிப்பு .மாத வருமானம் கொண்ட வைப்புத் தொகைக்கான உச்சவரம்பு 4.5 லட்சத்திலிருந்து 9 லட்சமாக அதிகரிப்பு. மின்சார பரிமாற்ற துறைக்கு ரூ. 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் 500 புதிய திட்டங்களுக்கு அனுமதி . 10000 உயிரி உள்ளீடு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
வெள்ளிக்கு இறக்குமதி தீர்வை அதிகரிப்பு. தொலைக்காட்சி பெட்டி உதிரி பாகங்களுக்கான இறக்குமதி தீர்வை ஐந்து சதவீதத்திலிருந்து 2.5% ஆக குறைப்பு.