செப்.16.
திண்டுக்கல் மதுரை கோட்டத்தில் உள்ள சமயநல்லூர் – கூடல்நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் பராமரிப்பு / பொறியியல் பணிகளை எளிதாக்கும் வகையில் கீழே குறிப்பிட்டுள்ளபடி ஒரு ஜோடி ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து செய்யப்படும்.
ஈரோடு ஜங்ஷனில் இருந்து பகல் 14.00 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16845 ஈரோடு- செங்கோட்டை ரயில், திண்டுக்கல் செங்கோட்டை இடையே 18.09.2024 முதல் 07.10.2024 வரை செவ்வாய்க் கிழமை தவிர பகுதியளவு ரத்து செய்யப்படும். ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும். மேற்குறிப்பிட்ட தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படாது.
ரயில் எண்.16846 செங்கோட்டையில் இருந்து மாலை 5.00 மணிக்கு புறப்படும் செங்கோட்டை- ஈரோடு ரயில், புதன்கிழமை தவிர, 19.09.2024 முதல் 08.10.2024 வரை செங்கோட்டை – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். செங்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரயில் இயக்கப்படாது; இது திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை மேற்குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும். இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.