மே.16.
இந்த வருடம் 2024-25 நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கரூர் ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிகள் 495/500 2 மாணவிகளும்,இனியா, தன்விகா.
பன்னிரண்டாம் வகுப்பு ஶ்ரீ நந்தினி முதல் மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியின் சார்பில் மாணவ, மாணவிகளைப் பெருமைப்படுத்தும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு (12 )மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் , 480க்கும் மேல் எடுத்த 17 மாணவ, மாணவிகளுக்கும்
சால்வை அணிவித்து கேடயம் வழங்கி பள்ளி நிர்வாகத்தினர்
பாராட்டு தெரிவித்தனர்.
இந்தச் சிறப்பான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த AGM வெங்கட கிருஷ்ண ரெட்டி, தலைமையில் ஜெயராம் பள்ளியின் தாளாளர் Er. ராமசாமி முன்னிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது.
மேலும் மேல்நிலைப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன்,
மேல்நிலைப் பள்ளி முதல்வர் தினேஷ், உயர்நிலைப் பள்ளி முதல்வர் த வடிவுக்கரசி, பத்தாம் வகுப்பு அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.