ஆக.6.
கர்நாடக மாநிலத்தில் மழை காரணமாக அங்குள்ள அணைகளில் நீர் நிரம்பி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. கரூர் மாவட்டம் மாயனூரில் கட்டப்பட்டுள்ள கதவணை வழியாக காவிரி நீர் திருச்சி நோக்கி செல்கிறது. மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ள அபாயம் இல்லை.
இன்று காலை மாயனூர் கதவணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 49693 கன அடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் 48073 கன அடி நீர் கதவணை வழியாக திறந்து விடப்பட்டது. தென்கரை வாய்க்காலில் 800 கன அடி, கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடி, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடி, கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துவிட்டது. இன்று காலை 8மணி நிலவரப்படி வினாடிக்கு 26000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணை நிரம்பியதால் உபரிநீர் 26000 கன அடியும் காவிரி ஆற்றில் வந்துகொண்டிருக்கிறது. இந்த நீர் கரூர் மாவட்டத்தை அடையும்போது மாயனூர் கதவணைக்கு வரும் பட்சத்தில் நீர்வரத்து மேலும் குறைந்துவிடும்.