ஜன.24.
கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்வதற்கான முகாம்கள் முதற்கட்டமாக 3 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ளது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் Alimco நிறுவனம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பயனாளிகள் தேர்வு முகாம்கள் 3 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறஉள்ளது. இம்முகாமில் முடநீக்கு சாதனம், செயற்கைால் மற்றும் கை, மடக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ரோலேட்டர், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி சாதனம், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச், காதொலி கருவி போன்ற உபகரணங்களில் அவரவர் தகுதிக்கேற்ப மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் 27.01.2025 திங்கட்கிழமை தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு லட்சுமிமஹால், செல்லாண்டிபட்டியிலும், 28.01.2025 செவ்வாய்க்கிழமை கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சமுதாயக்கூடம், தரகம்பட்டியிலும், 29.01.2025 புதன்கிழமை கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள P.S.மஹாலிலும் நடைபெற உள்ளது.
மேற்படி ஊராட்சி ஒன்றிய பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் தேவைப்படுவோர் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல்-2,UDID அட்டை நகல்-2 ஆதார் அட்டை நகல்-2 குடும்ப அட்டை நகல்-2 மற்றும் இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.