தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களது கிராமங்களிலேயே வழங்கிட உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை’ திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம். வலங்கைமான் வட்டாரம். மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சிபாளையம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எம்.பி. ஜோதிமணி முன்னிலை வகித்தார்.
கலெக்டர் பேசுகையில்,
வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர்களை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை’ எனும் திட்டத்தில் முதற்கட்டமாக கரூர் மாவட்டத்தில் 200 கிராமங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்களுடன் திட்டங்களையும் ஒருங்கிணைத்து கொண்டு சேர்க்க முடியும்கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்திற்கான முகாம்கள் மாதம் இருமுறை (2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமை) ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள 2 கிராமங்களில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் அரசு அலுவலகங்களுக்கு சென்ற நிலை மாறி அரசு அலுவலர்கள் விவசாயிகளை தேடி அவர்களுடைய கிராமங்களுக்கே வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். வேளாண், வேளாண் பொறியியல் துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ. 2.74 இலட்சமும். வேளாண் பொறியியல் துறையின் சார்பாக 7 பயனாளிகளுக்கு ரூ. 10.20 இலட்சம் மானியத் தொகையும். கூட்டுறவுத்துறையின் சார்பாக 10 பயனாளிகளுக்கு உதவித்தொகைகளும். 12.21 இலட்சம் மதிப்பீட்டிலான கடன் கால்நடை பரமரிப்பு துறையின் சார்பாக 2 பயனாளிகளுக்கு கால்நடைகளுக்கான தாது உப்பு கலவைகளும் என மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ. 38.22 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.பி வழங்கினர். முன்னதாக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர். வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தம் வேளாண்.அலுவலர் உமா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தியாகராஜன், கால்நடை பராமரிப்புத் துறை மரு.சாந்தி கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் அருண்மொழிகலந்துகொண்டனர்.