ஜன.18.
வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-2024-ல் சட்டமன்றத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செங்காந்தள் மலர் விதைகள் வர்த்தகம் செய்தல்” அறிவிப்பின்கீழ் கரூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட அங்காடி பகுதிகளான கரூர், குளித்தலை, இரும்பூதிப்பட்டி மற்றும் சின்னதாராபுரம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் “கண்வலிக் கிழங்கு விதை” விற்பனையை முறைப்படுத்தி அரசாணை மற்றும் அரசிதழ் வெளியாகியுள்ளது.
எனவே. கண்வலிக் கிழங்கு விதை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்று பயன்பெறலாம் என மாவட்ட கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.