மார்ச்.11.
கரூர் மாவட்டம் இராயனூரில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் 25 மெ.டன் குளிர்பதன கிட்டங்கி அமைந்துள்ளது. இக்கிட்டங்கியில் பழங்கள், காய்கறிகள், உலர் பொருட்கள் போன்ற வேளாண் விளைப் பொருட்களை வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டு விவசாயிகள், வியாபாரிகள், தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியோர் பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் தங்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கண்ட திட்டத்தில் பயன் பெற ddab.karur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் மற்றும் 8220915157, 9894971906 என்ற அலைபேசி எண்ணிலும். வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), இராயலூர் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்தள்ளார்.