பிப்.10.
கரூரில் நடைபெறும் (Open Turf) திறந்த தரை கிரிக்கெட் போட்டி
விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் கரூரில் ஜேசிஐ கரூர் டைமண்ட் (Open Turf) திறந்த தரை கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது.
மொத்தப் பரிசுத்தொகை: ரூபாய் 60,000.
நடைபெறும் நாள்: பிப்ரவரி 15 மற்றும் 16, 2025. இடம்: ஃபோர்டி எலெவன் ஸ்போர்ட்ஸ், சேலம் பைபாஸ் சாலை, கரூர். முதல் பரிசு தொகை: ரூபாய் 20,000 மற்றும் வெற்றிக்கோப்பை. இரண்டாவது பரிசு தொகை: ரூபாய் 15,000 மற்றும் வெற்றிக்கோப்பை. மூன்றாவது பரிசு தொகை: ரூபாய் 10,000 மற்றும் வெற்றிக் கோப்பை. நான்காவது பரிசு தொகை: ரூபாய் 5,000 மற்றும் வெற்றிக்கோப்பை. ஐந்தாவது முதல் எட்டாவது இடத்தின் பரிசு தொகை: ரூபாய் 2,500.
முதலில் பதிவு செய்யும் இருபது அணிகளுக்கு ஐந்து காஸ்கோ டென்னிஸ் பந்துகள் இலவசமாக வழங்கப்படும்.
முதலில் பதிவு செய்யும் 32 அணிகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படும். இப்போட்டி Knock out முறையில் நடைபெறும். பதிவேற்றம் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 10, 2025.
இந்நிகழ்வின் தலைவர் ஜீவாநந்தன், மைல்சாமி, உத்திரபதி, கரூர் டைமண்ட் சங்கம் தலைவர் நாகராஜன், மணிகண்டன், சுரேஷ் முகமது கமாலுதின். உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ள 7200123452, 9843347862, 9514314342 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.