செப்.6.
கரூர் மாவட்டத்தில் 8 பேரூராட்சிகள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தலில் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
எனினும் புலியூர் பேரூராட்சியானது திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக்கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.அக்கட்சி உறுப்பினர் கலாராணி என்பவருக்கு தலைவர் பதவி எதிர்பார்ப்பில் வந்தார். .தலைவர் தேர்தல் நடைபெற்றபோது 15 மொத்த உறுப்பினர்களில் 14 பேர் வந்திருந்தனர். இதில் கலா ராணி வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. புவனேஸ்வரி தலைவர் பொறுப்புக்கு மனு தாக்கல் செய்தார். இதனை அடுத்து புவனேஸ்வரி தேர்வு செய்யப்பட்டதாக நிர்வாக அலுவலர் அறிவித்தார். எனினும் கட்சி தலைமை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய தொகுதிகளில் உள்ளவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறியதை எடுத்து புவனேஸ்வரி ராஜினாமா செய்தார் . எனினும் கலாராணியோ தான் ஒரு உறுப்பினர் இருந்தாலும் தனக்கு சேர்மன் பதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் இரண்டு கூட்டங்களில் உறுப்பினர்கள் வருகை குறைவு காரணமாக தலைவர் தேர்தல் நடைபெறவில்லை.
புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று தலைவர் தேர்தல் நடைபெற்றது. உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் புவனேஸ்வரி சேர்மன் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஒரே ஒரு உறுப்பினரான கலாராணி இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு அரங்கை விட்டு வெளியேறி புலியூர் பேரூராட்சி வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சேர்மன் புவனேஸ்வரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் நாட்ராயனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தாந்தோணி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ரகுநாதன், புலியூர் பேரூராட்சி செயலாளர் அம்மையப்பன் மற்றும் புலியூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.