ஜன.9.
புலியூர் செட்டிநாடு வித்யா மந்திர் (CBSE), பள்ளியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிபுணர்களும், மாணவ-மாணவிகளும் பெற்றோரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நூலகர் மோகனசுந்தரம்,( தமிழ்நாடு அரசு சிறந்த நூலகர் விருது பெற்றவர்), டாக்டர் புனிதா,( செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் முதல்வர்), சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். செட்டிநாடு வித்யா மந்திர் புள்ளி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.
மாஸ்டர் தக்க்ஷித் எழுதிய புத்தகத்தின் முதலாவது பிரதி வெளியிடப்பட்டது. மாணவரின் எழுத்து திறனுக்கு மதிப்பளித்து, கொண்டாடப்பட்டது. இந்த புத்தக திருவிழாவில் இந்தியாவின் முன்னணி பதிப்பாளர்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு, எல்லா புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்பட்டது. இதில் செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அருகிலுள்ள பள்ளிகளும் பங்குபெற்றன அனைவருக்கும் புத்தகங்களை ஆராய்ந்து,படிப்பது குறித்து ஆரவத்தை தூண்டும் ஒரு அரிய வாய்ப்பாக புத்தக கண்காட்சி அமைந்தது.