செப்.20.
அமித்ஷாவை சந்தித்த 4 நாட்களில் கூட்டணியில் இருந்து பாஜகவை அதிமுக வெளியேற்றியது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 எம்.பி. இடங்களை ஒதுக்க பாஜக கேட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் எடப்பாடி விவாதித்துள்ளார். பாஜகவுக்கு என இருபது இடங்களை பெற்றுக்கொண்டு பின்னர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு சீட் ஒதுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் இந்த உள் இட ஒதுக்கீடு குறித்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிய வந்தது. 20 இடங்களை ஒதுக்குவது கூட பரவாயில்லை. எப்படியோ போகட்டும் ஆனால் கட்சியில் இருந்து பிரிந்து சென்று போட்டியாக செயல்படுபவர்களுக்கு பாஜக சீட் ஒதுக்குவது என்பது ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல என நிர்வாகிகள் தெரிவித்தனர். செல்வாக்கு இல்லாதவர்கள்- போட்டியாக செயல்படுபவர்களுக்கு பாஜக தனியாக சீட் தருவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என எடப்பாடி கூறியிருக்கிறார்.
இதற்காக சமயம் பார்த்துக்கொண்டு இருந்தபோதுதான், அண்ணாமலை பேச்சை வைத்து கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டனர்.
மோடி அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிகிறது என்பதால் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தி முடித்திருக்க வேண்டும். தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ளன. நாடு முழுவதும் எம்.பி. தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது.
பல்வேறு அணிகளாக பிரிந்திருந்த எதிர்க்கட்சிகள் தற்போது ஒன்றிணைந்து விட்டன. அவர்கள் இந்தியா என்ற பெயரில் கூட்டணியை தொடங்கியுள்ளனர். இந்தக் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள், பெரும்பாலான பெரிய மாநிலங்களில் ஆட்சியில் இருப்பவை. இதனால் மக்களவை தேர்தல் வந்தால், அவர்கள் மாநிலங்களில் வெற்றி பெறுவார்கள். அப்படி வெற்றி பெற்றால் பாஜக கூட்டணி தோற்கும் நிலை உருவாகியுள்ளது.
அதற்கு முக்கிய காரணம் கடந்த மக்களவை தேர்தலின் போது கூட்டணியில் இருந்த கட்சிகளையே உடைத்து, அந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியை கொண்டு வர திட்டமிட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. அதிமுக வும், இதில் ஒருவிதத்தில் அடக்கம்.
உதாரணமாக மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி, பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கூட்டணி அமைத்து போட்டியிட்டு பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு அந்த கூட்டணியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தது. தற்போது அந்தக் கட்சிகள், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
இதனால், இந்தியா கூட்டணிக்கு பலம் பெருகி வருவதை தாமதமாக உணர்ந்து கொண்ட பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 10 ஆண்டு ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது இருக்கும் கூட்டணிக் கட்சிகளுடன் முன் கூட்டியே கூட்டணியை உறுதி செய்து தேர்தல் முன்னெடுப்புகளை துவக்குவது என செயலில் இறங்கியது.
அதன்படி ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியுடன் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த 15ம் தேதி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி தனியாக சந்திப்பு நடைபெற்றது. அப்போது கூட்டணியை இருவரும் இறுதி செய்வது குறித்து பேசியுள்ளனர்.
அதில் பாஜகவுக்கு தமிழகத்தில் 20 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும். புதுவையைப் பொறுத்தவரை பாஜக, என்ஆர்.காங்கிரஸ் தான் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது என்பதாக ஆரம்பித்து 14 தொகுதிகளை நிச்சயம் வேண்டும் என கூறியுள்ளனர்
தமிழகத்தைப் பொறுத்தவரை 14 தொகுதிகளை பாஜக வாங்கி, அதில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன், ஓ.பி.ரவீந்திரநாத், கிருஷ்ணசாமி, பாரிவேந்தர் ஏ.சி.சண்முகம், ஆகியோருக்கும் சீட் கொடுக்கப்பட உள்ளது.
இதனால் அடுத்த அடியை எப்படி வைப்பது என்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாய்ப்பாக அண்ணாமலையின் பேச்சு. அமைந்ததால் திருப்பி அடிக்க ஆரம்பித்து விட்டனர். ற்கனவஏ ஜெயலலிதாவைப் பற்றி ஊழல் முதல்வர் என்று கூறியதையும் சேர்த்து கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றி விட்டனர்.
கூட்டணியில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்துக்கு சீட் கொடுப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிடிக்கவில்லை. இப்போது தொகுதி கொடுப்பார்கள். பின்னர் கட்சியில் சேர்த்து பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பார்கள். கட்சிக்குள் பாஜக தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று எடப்பாடி கருதுகிறார். இதனால் கூட்டணியில் இருந்து வெளியேற சமயம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, அண்ணாமலையின் பேச்சு பவன்சர் ஆக அமைந்து விட்டது.