செப்.18.
பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை எளிதாக்க, நிலையத்தின் பிளாட்ஃபார்ம் எண்.1 & 2 போக்குவரத்துக்கு இடைநிறுத்தப்படும். எனவே, கீழே குறிப்பிட்டுள்ளபடி சில ரயில் சேவைகளுக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிறுத்தம் நீக்கப்படும்.
சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் பின்வரும் ரயில் சேவைகள் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் 20.09.2024 முதல் 20.12.2024 வரை (92 நாட்கள்) நிற்காது.
ரயில் எண். 11013/11014 லோகமான்ய திலக் டெர்மினஸ் கோயம்புத்தூர் – லோகமான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.
ரயில் எண்.16231/16232 கடலூர் துறைமுகம் – மைசூர் – கடலூர் துறைமுகம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.
ரயில் எண்.16235/16236 தூத்துக்குடி மைசூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில்கள்.
Train No.16525/16526 Kanniyakumari – KSR Bengaluru Kanniyakumari Express Trains.
ரயில் எண்.16315/16316 மைசூர் – கொச்சுவேலி – மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.
Train No.12677/12678 KSR Bengaluru – Ernakulam – KSR Bengaluru Express Trains. இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.