நவ.28.
பருவத்தில் சாகுபடி செய்யப்படும் வாழை, மரவள்ளி தக்காளி, வெங்காயம் மற்றும் மிளகாய் போன்ற பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் போது எதிர்பாராத காலநிலை மாற்றங்களால் இழப்புகள் ஏற்படுகிறது. அத்தகைய காலக் கட்டங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்களை பிரதம மந்திரி பயிர் காப்பிட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலமாக தவிர்க்கலாம்.
கரூர் மாவட்டத்தில் தற்போது 2024 ரபி பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி தக்காளி, மிளகாய், வெங்காயம் போன்ற பயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட குறுவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் வாழை, மரவள்ளி, தக்காளி, வெங்காயம் மற்றும் மிளகாய் போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்களான விவசாயி புகைப்படம் பாஸ்போர்ட் அளவு: ஆதார், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை பதிவு கட்டணத்துடன் எக்டருக்கு பிரிமியத் தொகையாக தக்காளிக்கு ரூ.1768-ம். வெங்காயத்திற்கு ரூ.2060-ம், மிளகாய்க்கு ரூ.1220, 31-01-2025 தேதிக்குள்ளும், வாழைக்கு ரூ.3460/ம் மற்றும் மரவள்ளிக்கு ரூ.4082-ம், 28-02-2025 தேதிக்குள்ளும், பிரீமியம் தொகையினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது இ.சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக்கொள்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.