டிச.16.
ஆன்லைன், வங்கி கணக்குகளில் மோசடி, பெண்களுக்கு எதிராக செல்போன் டார்ச்சர் உள்ளிட்டவைகளில் எச்சரிக்கையாக இருப்பது சம்பந்தமாக கரூர் ஒன்றிய மாதர் சங்கத்தின் சார்பாக புகளூர் சமுதாய கூடத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. புகளூர் நகர் மன்ற உறுப்பினர் இந்துமதி தலைமை தாங்கினார். மாதர்சங்க கரூர் மாவட்ட செயலாளர் சுமதி வரவேற்புரை நிகழ்த்தினார். சிஐடியு கரூர் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் துவக்க உரையாற்றினார். கரூர் சைபர் கிரைம் காவல் துறை ஆய்வாளர் இசைவாணி, உதவி ஆய்வாளர் சுதர்சனன், வேலாயுதம்பாளையம் ஸ்டேட் பேங்க் மேலாளர் சந்தோஷ் உதவி மேலாளர் தினேஷ், வேலாயுதம் பாளையம் காவல் துறை உதவி ஆய்வாளர் திருமதி சுபாஷினிஆகியோர் விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில் புகலூர் நகர மன்ற துணைத் தலைவர் பிரதாபன் கவுன்சிலர்கள் தங்கராஜ், கல்யாணி, நந்தினி, சுசீலா, சபீனா, செல்வக்குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கரூர் ஒன்றிய செயலாளர் பூரணம் மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் டிஎன்பிஎல் அரவிந்த், நடராஜன், கிருஷ்ணன், மதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.