டிச.20.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின் படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் .R.சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின் படியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவினால், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பணிபுரியும் பெண்களுக்கு பணிபுரிகின்ற இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் P. .அனுராதா விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் வட்டாட்சியர், கரூர், தொழிலக பாதுகாப்பு துறை அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள், குழந்தை மற்றும் ஆள்கடத்தல் சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர், வழக்கறிஞர்,சட்ட தன்னார்வலர், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 160 பெண்கள், உள்ளிட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.