அக்.22.
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை தேர்தல் அதிகாரி ஒத்திவைத்துவிட்டு போனதால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெறுவதாக இருந்தது. அப்போது அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தலை தேர்தல் நடத்தும் அதிகாரி ஒத்திவைத்து விட்டு சென்றதால் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் அதிகாரியின் காரை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
.பேச்சுவார்த்தை பலன் அளிக்காததால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர் .போலீஸ் வேனில் ஏற்றிச் செல்லப்பட்டு அவர்களை ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.