அக்.26.
டி 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடிய போட்டியில்இந்திய அணிவீரர் அஸ்வின் சிறப்பாக ஆடினார். கடைசி ஓவரில் கடைசிப் பந்து வீசப்பட்டபோது அதை ஆடுவதை தவிர வேறு வழியில்லை என்று நிலை ஏற்பட்டது. எந்த வீரரும் அடித்து ஆடவே செய்வார். ஆனால் பந்து வைடு ஆனது. இதை துல்லியமாக கணித்து அவ்வளவு பரபரப்புக்கும் மத்தியில் அஸ்வின் அந்த பந்தை அடிக்காமல் விட்டார். அடுத்த பந்தை தூக்கி அடித்து வெற்றியை வசமாக்கினார். அஸ்வின். இந்த சமயோசித முடிவு இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.
டி20 கிரிக்கெட் குறித்தும் பாகிஸ்தான் உடனான ஆட்டம் குறித்தும் எனது அனுபவங்களை அஸ்வின் குட்டி ஸ்டோரியாக சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.