பிப்.4..
தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் தொழில் வணிகத்துறை சென்னை எல் நிர்மல் ராஜ், கலெக்டர் தங்கவேல் தலைமையில் குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது தொடர்பாக வங்கியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பாக கடன் வழங்கி சேவையாற்றி வருகிறது. சில தனியார் வங்கிகள் கடன் கொடுப்பதற்கு பல்வேறு விதிமுறைகளை விதித்து அதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. வங்கிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி, கடன் கொடுப்பதில் உள்ள பிரச்சனைகள் என்ன என்பதை கேட்டறிந்து அவர்களுக்கு கடன் வழங்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கலைஞர் கைவினை திட்டத்தில் ரூ.3லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி வழங்குதல், ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்குதல். 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்குதல், திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி வழங்குதல் உள்ளிட்டவை குறித்து வங்கியாளருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இத்திட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். எந்த வகுப்பினராகவும் இருக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் கட்டிட வேலை மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினை பொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மூங்கில், பிரம்பு சணல். பனை ஓலை வேலைப்பாடுகள், நகை செய்தல், சிகை அலங்காரம். அழகு கலை. துணி நெய்தல் துணிகளில் கலை வேலைப்பாடுகள், நகை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள். கைவினைப் பொருட்கள். தையல் வேலை, கூடை முடைதல், கயிறு பாய் பின்னுதல் துடைப்பான் செய்தல், மண் பாண்டங்கள். சுடுமண் வேலைகள், மற்றும் பொம்மைகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு சிறு தொழில்கள் தொடங்குவதற்காக கலைஞர் கைவினை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இதற்காக வங்கியாளர்கள் அதிக அளவில் கடன் கொடுக்க முன்வர வேண்டும்.
மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் கொடுத்த விவரங்களும், மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நடப்பு ஆண்டு கடன் கொடுக்கப்பட்டு அவர்கள் தொழில் தொடங்கப்பட்ட விவரமும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை பொது மேலாளர் மாரி செல்வம், நபார்டு வங்கி மேலாளர் மோகன் கார்த்திக், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் .வசந்தகுமார் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பாபு, வேளாண். இணை இயக்குனர் சிவானந்தம் மற்றும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கியின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.