மார்ச்.1.
கரூர் மாவட்டத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வுகள் 03.03.2025 முதல் துவங்கி 27.03.2025 முடிய நடைபெற உள்ளது. 03.03.2025 அன்று கரூர் மாவட்டத்தில் மேல்நிலை பணிரெண்டாம் வகுப்பு தமிழ்ப்பாட தேர்வு 45 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 4741 மாணவர்களும், 5470 மாணவிகளும் மொத்தம் 10211 பேர், மற்றும் தனித்தேர்வர்களாக 52 பேர் என மொத்தம் 10263 மாணவமாமணவிகள் எழுதுகின்றனர்.
மேலும் மேல்நிலை முதலாம் ஆண்டு 11ஆம் வகுப்பு தேர்வினை 5007 மாணவர்களும், 5519 மாணவிகள் என பொத்தம் 10526 பேர் மற்றும் தனித்தேர்வர்கள் 195 என பொத்தம் 10721 பாணமாமணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
இத்தேர்வுக்காக கரூர், மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின்படி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு மற்றும், தீயணைப்புத்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்சார வாரியத்தின் மூலமாக தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் தேர்வெழுத மையங்களுக்கு வந்து செல்ல பேருந்து வசதி இல்லாத பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இணை இயக்குநர்(ஆசிரியர் தேர்வுவாரியம்) கரூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வில் முறைகேடுகள் எதும் நடைபெறாமல் இருக்கவும், நேர்மையாகவும். செம்மையான முறையிலும் தேர்வு நடைபெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிலையான படையினர் மற்றும் புறக்கும்படையினர் 112 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.