டிச.18.
கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டம் இன்று மிகவும் பரபரப்பாக இருந்தது. போர்க்களமாக மைதானம் காட்சி அளித்தது. இரு அணி வீரர்களும் கடுமையாக ஆடினர். தொடக்கத்திலிருந்து அக்ரோஷமாக விளையாடினர். முதல் பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 2 கோல் அடித்துமுன்னிலை வகித்தது. இந்த சமயத்தில் பிரான்ஸ் அணியின் வீரர் எம்பாப்வே அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தததால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.
அர்ஜென்டினா – பிரான்ஸ் தலா 2 கோல்கள் அடித்து சம நிலையில் இருந்ததால் போட்டி 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் அபார கோலடித்தார் மெஸ்ஸி. 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்ற நிலையில் பிரான்ஸ் அணியின் எம்பாப்வே கோல் அடித்து 3-3 என சமன் செய்துவிட்டார்.
இதனையடுத்து ஷுட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் நடப்பு சாம்பியன் பிரான்சுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா பெனால்டி ஷூட் அவுட் முறையில் உலக கோப்பையை வென்றது.
உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் வென்ற அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடினர்.
மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பை போட்டி இது என்பதால் வெற்றிக்கோப்பையை கையில் ஏந்தி மைதானத்தில் ஆனந்தக்கூத்தாடினார்.