மே.18.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஆண்டிப்பட்டிக் கோட்டை பழைய மேல்நிலைப்பள்ளியில் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ ஆகியோர் பார்வையிட்டனர்.
தற்பொழுது அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. அதனை தற்காலிகமாக அரசுக்கு சொந்தமான இடங்களில் நடத்துவது ங பரிசீலிக்கப்பட்டு ஆண்டிப்பட்டிக்கோட்டை உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக இயங்குவதற்கு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரையில் இடம் தேர்வு செய்து நிரந்தர கட்டடம் அமைக்கப்படும் அதுவரை தற்காலிகமாக இங்கு இயங்கும் என கலெக்டர் தெரிவித்தார்.
திருச்சி மண்டல இணை இயக்குனர் (உயர்கல்வித்துறை ) குணசேகரன், செயற்பொறியாளர் சிவக்குமார், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வசந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.