ஜன.24.
ஜீயபுரம் ரயில் நிலையத்தில் கீ – மேனாக பணியாற்றி வருபவர் ரமேஷ் நாயக். கடந்த 20ஆம் தேதி எலமனூர் -முத்தரசநல்லூர் ரயில் நிலையத்துக்கு இடையே இருப்புப் பாதை பிளேட்டுகளில் கீறல் விழுந்திருந்தது. இதை கவனித்த ரமேஷ் உடனடியாக முதன்மை பிரிவு பொறியாளருக்கு தகவல் அளிக்க அவர் விரைந்து வந்து சரிசெய்யப்பட்டது.திருச்சி – குளித்தலை மார்க்கமாக வந்த ரயில்களை பாதுகாப்பாக முறையில் செல்ல சிக்னல் கொடுத்தார். விழிப்புணர்வுடன் செயல்பட்டு ரயில்வே பாதுகாப்பை உறுதி செய்தமைக்காக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கௌதம் ஸ்ரீனிவாஸ் , ரமேஷுக்கு பாராட்டு தெரிவித்தார். இதேபோன்று மொரப்பூர் -திருப்பத்தூர் ரயில்வே இருப்பு பாதையில் ஏற்பட்ட விரிசலை கண்டுபிடித்து விழிப்புணர்வுடன் செயல்பட்ட கீ-மேன் முனுசாமிக்கு பாராட்டு தெரிவித்தார். இருவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். கோட்ட பாதுகாப்பு அதிகாரி பிரவீன் குமார், பவன் குமார் உடன் இருந்தனர்.