நவ.26.
கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், லாலாபேட்டை காவல் நிலைய சரக பகுதிகளில் கரூரை பீடி, சிகரெட் விற்பனை செய்யும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அவர்களது நான்கு சக்கர வாகனத்தில் பஞ்சப்பட்டி பகுதிகளில் விற்பனை செய்து விட்டு திரும்பிகரூர் வரும்போது வடம்பாடி கிராமம், பூலாம்பட்டி நான்கு ரோடு அருகே அடையாளம் தெரியாத 2நபர்கள் ஹெல்மெட் அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து வாகனத்தை மறித்தனர். அவர்களிடமிருந்து ரூபாய். 3,87,000/- த்தை கொள்ளையடித்து தப்பினர். இது தொடர்பாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவுப்படி, குளித்தலை உட்கோட்ட டி.எஸ்.பி. செந்தில்குமார் மேற்பார்வையில், லாலாபேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றியுள்ள CCTV Camera பதிவுகளை ஆய்வு செய்தனர். மேற்படி நிறுவன வாகன ஓட்டுனர் கரூர் திருமாநிலையூரை சேர்ந்த பாஸ்கர் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதன் மூலமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 1) நிறுவன வாகனத்தின் ஓட்டுனர் கரூர் திருமாநிலையூரை சேர்ந்த பாஸ்கர் 2) கரூர் மாவட்டம், பாகநத்தத்தை சேர்ந்த தரண்ராஜ், 3) கரூர் மாவட்டம், பாகநத்தத்தை சேர்ந்த தமிழரசன் மற்றும் தாந்தோணிமலை வ.உ.சி தெருவை சேர்ந்த ரவிக்குமார் என தெரியவந்ததையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும், கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறப்பாக பணிபுரிந்து மேற்படி கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ் கான்அப்துல்லா வெகுவாக பாராட்டி வெகுமதி வழங்கினார்கள்.