மே.6.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை எஸ். பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்ற முத்துக்கருப்பனுக்கு கரூரில் பாராட்டு விழா நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஆக பணியை துவக்கி எஸ்.பி. யாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர்.
கரூரில் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் துரைராஜ், காவல்துறை ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி முத்துசாமி, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. சாம்பசிவம், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், டாக்டர் மோகன் , நன்னியூர் ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் மாரப்பன், ரமணி பத்திரிகையாளர் செல்வம், கொடைக்கானல் நகராட்சி முன்னாள் தலைவர் ஸ்ரீதர், மனோகரன், ஸ்டேட் பேங்க் நடராஜன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.
காவல் துறையினர், அரசு அதிகாரிகள்,கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். முத்துக்கருப்பன் உதவிஆய்வாளராக காவல்துறை பணியில் சேர்ந்து காவல் கண்காணிப்பாளராக பணிஓய்வு பெற்றார். பத்திரிகையாளர் சிவராமன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் முத்துக் கருப்பன்- வீரலட்சுமி தம்பதியினர் நன்றியுரை ஆற்றினர்.