ஜூன்.13.
காவல்துறையில் 24.05.1999 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்து 01.06.2024 அன்று சிறப்பு உதவி ஆய்வாளராக 31 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். பதவி உயர்வு பெற்ற கரூர் மாவட்டத்தை சேர்ந்த 31 சிறப்பு உதவி ஆய்வாளரகள் கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. முனைவர் பிரபாகரரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
கரூர் மாவட்ட எஸ்.பி. முனைவர் பிரபாகர் பதவி உயர்வு பெற்ற 31 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கும் பரிசு வழங்கி அவர்களின் பணி சிறக்க வாழ்த்தினார். மேலும் மேற்படி பதவி உயர்வு பெற்ற 31 சிறப்பு உதவி ஆய்வாளர்களையும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டப்படுள்ளனர் எனவும் தெரிவித்தார்.