டிச.6.
செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கருவி மானியத்தில் வழங்கபடுகிறது. வேளாண்மை பொறியியல்துறை அலுவலகங்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல்துறையின் மூலம் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கருவி மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கருவியைப் பயன்படுத்தி விவசாய கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்ப் செட்டுகளை வீட்டில் இருந்தபடியும். வெளியூர்களில் இருந்தபடியும் இயக்கவும். நிறுத்தவும் முடியும். இதற்கு மானியமாக சிறு/குறு /பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கருவியின் மொத்தவிலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.7000/- வரை மானியமாக வழங்கப்படும். மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40% அல்லது அதிகபட்சமாக ரூ.5000/- வரை மானியமாக வழங்கப்படும். தற்போது. கரூர் மாவட்டத்தில் பொதுப்பிரிவுக்கு 152 எண்களும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு 5 எண்களும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே. விருப்பமுள்ள விவசாயிகள் கரூர் மற்றும் குளித்தலை வேளாண்மைப் பொறியியல்துறை அலுவலகங்களைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும், கரூர் மற்றும் குளித்தலை உபகோட்டங்களுக்கு உட்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே.பொ) 9443404531 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.