பிப்.27.
கவிஞர் மாகா வின், அன்பின் நெடுங்குருதி கவிதை நூல் வெளியீட்டு விழா கரூரில் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர் மருவத்தூர் வெங்கடேசன் நூலை வெளியிட்டார் . வாசகர்கள் நூல் பெற்றுக் கொண்டனர்= எழுத்தாளர் குடவாசல் இலக்கியன் சிறப்புரையாற்றினார். கவிஞர் கலியமூர்த்தி, திருக்குறள் பேரவை மேலை பழனியப்பன், உளுந்தூர்பேட்டை இடைநிலை ஆசிரியர் கவிஞர் குமரவேல், மாவட்ட மைய நூலகர் சிவகுமார் வாழ்த்தி பேசினர். கவிஞர் மாகா ஏற்புரை ஆற்றினார். தமிழாசிரியர் சரவணன் தொகுப்புரை வழங்கினார்.