செப்.25.
கரூர் அருகே வெள்ளியணை அடுத்த கட்டாரி கவுண்டனூரைச் சேர்ந்த தினேஷ்குமார் (26) வேலாயுதம் பாளையத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.47 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். இன்று வேலைக்கு கரூர் திருகாம்புலியூர் மேம்பாலத்தில் சென்றபோது பேட்டரி பகுதியிலிருந்து திடீரென புகை வந்தைபார்த்து சுதாரித்த தினேஷ்குமார், பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டார். அடுத்த சில நொடிகளில் ஸ்கூட்டர் பற்றி எரிந்தது.
தகவலறிந்த கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.