டிச13.
தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்திலுள அமராவதி அணையின் நிரம்பியது. 90 அடி முழு கொள்ளளவு எட்டியதால் அணைக்கு வரும் நீர் ஆற்றில் விடப்படுகிறது. அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 36,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அமராவதியின் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாராபுரம் தடுப்பணைக்கு 52,ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அமராவதி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு( மி.மீ)- கரூர் 33, அரவக்குறிச்சி 70.50, அணைப்பாளையம் 57.20, க.பரமத்தி 39, குளித்தலை 29.20, தோகமலை 70.60, கிருஷ்ணராயபுரம் 35.40, மாயனூர் 43, பஞ்சப்பட்டி 80, கடவூர் 32, பாலவிடுதி 20, மயிலம்பட்டி 26, மொத்தம் 536.70, சராசரி 44.73மி.மீ.
குடகனாறு அணை நிரம்புகிறது
குடகனாறு அணையின் நீர்மட்டம் 27 அடி தற்போது 26.3 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு108 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையில் இருந்து 108 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மாயனூர் கதவனணைக்கு வினாடிக்கு 2589 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 2589 கண்ணாடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை.