• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Wednesday, June 18, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திட்டம் அமல்

karurxpress by karurxpress
May 16, 2025
in கரூர்
0
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்
170
VIEWS

தமிழ்நாட்டில் ஈரோடு, திருப்பத்தூர். கன்னியாகுமரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சமூக அளவிலான கருப்பைவாய், மார்பக மற்றும் வாய்புற்று நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பொதுவான புற்று நோய்களான வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் ஆகிய மூன்று புற்று நோய்களையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கி உயிரிழப்புகளை தவிர்த்து, அவர்களின் வாழ்நாளை நீட்டித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தும் உயரிய நோக்கோடு மக்களின் நலன் கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி செயல்படுத்தப்பட உள்ளது.

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண் சுகாதார தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கூறிய புற்றுநோய்களுக்கான விழிப்புணர்வு வழங்கி மற்றும் பரிசோதனை செய்து கொள்வதற்கான அழைப்புகளை அவரவர் வீடுகளிலேயே வழங்கப்படும்.

இதில் கரூர் மாவட்டத்தில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். 7 மருத்துவமனைகள் மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி 45 மையங்களில் புற்றுநோய்க்கான அரசு மருத்துவமனை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் கூடுதலாக 101 கிராமப்புற சுகாதார நலவாழ்வு மையங்கள் மற்றும் 4 நகர்புற நலவாழ்வு மையங்கள் உட்பட 105 மையங்களில் இச்சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு இலவச பரிசோதனை வசதிகள் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே வழங்கப்பட உள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண். பெண் இருபாலருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை வாய்புற்றுநோய் பரிசோதனையும் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மார்பக மற்றும் கருப்பை வாய்புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு புற்றுநோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்படின், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகள் மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள்.

பொது மக்கள் பணிபுரியும் இடங்களான அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சார் நிறுவனங்களில் மருத்துவக்குழுவினரை கொண்டும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளிலும் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இலவச புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Related Posts

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

by karurxpress
June 17, 2025
0

ஜூன.17. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்...

கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

by karurxpress
June 16, 2025
0

ஜூலை.16. கரூர் மாவட்டம்,கரூர் ஊரக உட்கோட்டம், வேலாயுதம் பாளையம் காவல்சரகம், பூங்கா நகர்,நானப்பரப்புரோடு...

608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

by karurxpress
June 16, 2025
0

ஜூன்.16. கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில், கல்வி...

ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

by karurxpress
June 14, 2025
0

ஜூன்.14. போலீஸ் டிஜிபி, ஐஜி, அறிவுரைப்படியும், டிஐஜி வழிகாட்டுதலின்படியும், கரூர் மாவட்ட எஸ்.பி....

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

June 17, 2025
கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

June 16, 2025
608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

June 16, 2025
ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

June 14, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved