செப்.6.
பாசமிகு நண்பர்களே நமது ஆசான் உயர்திரு செல்வதுரை சார் H.M ஆக இருந்த பொழுது சுமார் 4,000 க்கு மேல் மாணவர்கள் நமது M.H.S பள்ளியில் படித்தனர்.
120 க்கும் மேற்பட்ட ஆசிரிய பெருமக்கள் நம் பள்ளியில் பணியாற்றினார்கள். நம் ஆசிரியர் அனைவரும் நமக்கு ஒழுக்கத்தையும் நாம் வாழ்க்கையில் முன்னேறவும் அரும்பாடு பட்டார்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழாவை மிகவும் விமர்சையாக நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடினோம். அதேபோல் நமது ஆசான் குரு ஐயா செல்வத்துரை சார் அவர்களுக்கு இந்த 99 ஆவது பிறந்த நாளை நாம் மிகவும் விமர்சையாக கொண்டாட வேண்டும் முடிந்தவரை அந்த அந்த வருடம் படித்த குரூப்பில் தெரிவித்து.
அனைத்து மாணவர்களையும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 11 9.22 அன்று பள்ளிக்கு வர உதவி புரியுமாறு நண்பர்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
அகவை 99 வயதுடைய ஆசிரிய பெருமக்கள் எத்தனை பேர் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை.
இருந்தாலும் நமது ஆசான் வாழ்ந்து காட்டியுள்ளார் அவர் இன்னும் பல ஆண்டுகள் நம்முடன் வாழ்ந்து நமக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்க ஆண்டவனை பிரார்த்தனை செய்வோமாக.
என்றும் உங்கள் விசா ம குணசேகரன்.
இவ்வாறு முன்னாள் மாணவர் வேண்டுகோள் விடுத்ததுடன் மேலும் வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றினையும் துவங்கியுள்ளார். இந்த முன்னாள் மாணவர்கள் குழுவில் ஏராளமான மாணவர்கள் இணைந்து வருகின்றனர். அனைவரும் தங்களது தலைமை ஆசிரியர் பண்புகளையும் தங்களது அனுபவங்களையும் அதில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். பாராட்டு விழா நடத்துவதற்காக முன்னாள் மாணவர்கள் கைகோர்த்துள்ளனர்.