செப்17.
வீடு மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் வாரிய விதிகளின்படி தொகையை உடனடியாக செலுத்திட வேண்டும் என கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வரியம். திருச்சி வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட கரூர் மாவட்டம். சனப்பிரட்டி மற்றும் காந்தி கிராமம் ஆகிய திட்டப்பகுதிகளில் வீடு மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் வாரிய விதிகளின்படி தொகை திருப்பி செலுத்தும் காலம் முடிவுற்றும், தமிழ்நாடு அரசு வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும் நீண்டகாலமாக பலர் நிலுவைத் தொகையை செலுத்த முன்வரவில்லை.
ஆகையால், ஒதுக்கீடுதாரர்கள் இவ்வறிவிப்பை கண்டவுடன் தங்களிடம் உள்ள ஒதுக்கீடு ஆணை தொகை செலுத்திய ரசீது மற்றும் அசல் ஆவணங்களுடன் திருச்சி வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு கணக்கினை நேர் செய்து. நிலுவைத் தொகைகளை செலுத்தி, உரிய விதிமுறைகளின்படி கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு, ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்யும் நடவடிக்கையை ஒதுக்கீடுதாரர்கள் தவிர்க்குமாறும் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கரூர் மாவட்டம்