மே.22.
கரூர் கூடைப்பந்து குழு நடத்தும் எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 65 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி இன்று கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. முதல் ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் இந்தியன் நேவி- யங்ஓரியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தியன் நேவி அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 73 58 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர்.