மே.23.
கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் சவுத்வெஸ்டர்ன்- சதன் ரயில்வே அணிகள் விளையாடின. இதில் சவுத் வெஸ்டர்ன் அணி வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றனர். ஸ்கோர் 78 -62.
முன்னதாக நடைபெற்ற போட்டியில் இந்தியன் வங்கி- யங் ஓரியன்ஸ் அணி வீரர்கள் விளையாடினர். இதில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது. ஸ்கோர் 69- 59.