டிச.22.
கடந்த தீபாவளி விடுமுறையின் போது விமான கட்டணங்கள் திடீரென உயர்ந்தது. தற்போது கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறையை காரணம் காட்டி விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது . பண்டிகை கால விடுமுறை காரணமாக பயணிகள் அதிகம் விமான பயணத்தை மேற்கொள்வதால் கூடுதல் விமானங்களும் இயக்கப்படுகின்றன.
சென்னை -தூத்துக்குடிக்கு ரூ. 5300 என இருந்த கட்டணம் தற்போது 14, 500 ஆக உயர்ந்தது. மதுரைக்கு ரூ.3600 என இருந்தது தற்போது 14,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சிக்கு ரூ.10 ஆயிரம் முதல் 19ஆயிரத்து 500 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.