டிச. 13.
சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி கழகங்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் திருவிகா, சிவசாமி, மல்லிகா, ரேணுகா, ஜெயராஜ், சக்திவேல், சேரன் பழனிச்சாமி, தினேஷ், சுரேஷ், தானேஷ் முத்துக்குமார், செல்வகுமார், நெடுஞ்செழியன், வக்கீல்கள் சுப்பிரமணியன் மாரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.