நவ.12.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ பன்னீர்செல்வம் அணியினர் ஓரங்கட்டப்பட்டனர். ஓபிஎஸ் வலது கரமாக இருந்த கே பி முனுசாமி இபிஎஸ் பக்கம் தாவினார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கி விட்டு உதயகுமாரை நியமித்து சபாநாயகயரிடம் கடிதம் அளித்தனர். சட்டசபையில் ஓபிஎஸ் அருகே அமர மாட்டேன் எனக் கூறி இபிஎஸ் பிரச்சினை கிளப்பினார். எடப்பாடி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டசபைக்கு உள்ளேயும் வெளியிலும் போராட்டம் நடத்தி சட்டசபை நிகழ்வுகளையும் புறக்கணித்தனர் . ஓபிஎஸ் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என கூறி வருகிறார். இபிஎஸ் இனிமேல் ஓபிஎஸ்சுடன் இணைவதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது என கூறிவருகிறார்..
எடப்பாடி ஆட்சிக்கு எதிராக டிடிவி அணி எம்எல்ஏக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது எனது ஆதரவு எம்.எல்.ஏ க்களால் தான் ஆட்சி காப்பாற்றப்பட்டது. நாலரை ஆண்டு காலம் எடப்பாடி முதல்வராக இருந்ததற்கு காரணம் நான் தான் எனது ஓபிஎஸ் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டு விமானம் மூலம் புறப்பட்டபோது மதுரை விமான நிலையத்தில் அவரை வழியனுப்ப இபிஎஸ், ஓபிஎஸ் வந்தனர். ப்ரோட்டோகால் படி முக்கிய பிரமுகர்களை பாதுகாப்பு அதிகாரிகள் நிற்க வைத்தனர். சீனியாரிட்டி அடிப்படையில் முன்னாள் முதல்வர்கள் வரிசையில் பன்னீர்செல்வம் பக்கத்தில் எடப்பாடி நிற்க வைக்கப்பட்டார். அருகருகே நின்று கொண்டிருந்தவர்களை பிரதமர் கவனித்தார். எடப்பாடிக்கு அடுத்து அமைச்சர்கள் மூர்த்தி, சக்கரபாணி, தங்கம்தென்னரசு ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.
பிரதமர் மோடி வந்ததும் அனைவரும் மலர் கொடுத்தனர். அப்போது ஓபிஎஸ் இடம் இருந்து மலர் வாங்கி அடுத்து இபிஎஸ் இடம் இருந்து மலரை வாங்கிய மோடி இருவரது கைகளையும் இணைத்து வைத்து புன்னகை செய்தார். அதிமுக இணைந்து செயல்படுவதையே பாஜக விரும்புகிறது. அதைத்தான் பிரதமர் மோடி உணர்த்தி விட்டு சென்றுள்ளார். அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என மூத்த செய்தியாளர் ஒருவர் கூறினார்.