அக்.3.
கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய சேர்மனாக அதிமுகவை சேர்ந்த விஜய விநாயகம் உள்ளார். மொத்தமுள்ள 10 வார்டுகளில் ஐந்து வார்டுகளில் அதிமுகவும், தாமாக ஒரு வார்டு என கூட்டணியாக 6வார்டுகளில் இருந்தனர். திமுக உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தனர் . இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர்கள் மூன்று பேர் திமுகவில் இணைந்தனர். இதனால் அதிமுகவின் பலம் மூன்றாக சரிந்து விட்டது.
இன்று காலை குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் மன்றத்தில் கூடியது. தலைவர் விஜய விநாயகம் , துணைத்தலைவர் இளங்கோவன் கலந்து கொண்டனர் . மற்றும் ஒரு உறுப்பினர் மட்டுமே வந்திருந்தனர். கூட்டத்தை நடத்துவதற்கு மெஜாரிட்டி இல்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது என தலைவர் அறிவித்தார். மெஜாரிட்டி பலம் இல்லாததால் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தை அதிமுக இழக்கிறது. விரைவில் புதிய தலைவர் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.