அக்.15.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில்,
அதிமுக பொன் விழா கொண்டாட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. கட்சி தொடங்கப்பட்ட 50-வது ஆண்டுவிழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்ட மாநாட்டை நடத்துவது பொன்விழா இலச்சினை வெளியீட்டு தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கங்களை முன்னோடிகளுக்கு அணிவிப்பது. ஒரே மாதிரியான பதாகைகள் சுவரொட்டிகள் அமைத்தல், கழக வளர்ச்சிக்கு தொண்டாற்றும் எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் கவிஞர்கள் கலைத்துறையினர் உள்ளிட்டோருக்கு இந்தப் பொன்விழா ஆண்டு முதல் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ,பெயர்களில் விருது வழங்கி கௌரவித்தல். பேச்சு, கவிதை ,கட்டுரை, விளையாட்டு போட்டி மாநிலம் முழுவதும் நடத்தி வெற்றி பெறுவோருக்கு மாநாட்டில் சான்றிதழ் பரிசு வழங்குவது.
தலைமைக் கழகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டல், பேச்சாளர்கள் கலைத்துறையினருக்கு உதவி செய்தல், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்பகால உறுப்பினர்களுக்கு சான்றிதழ், பொற்கிழிவழங்குதல், காலச் சூழல் போன்ற வரலாற்று படம் தயாரித்து தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்புதல், நிர்வாகிகள் தெரிவிக்கும் ஆலோசனைகளை பரிசீலனை செய்து பொன்விழா ஆண்டில் நிறைவேற்றப்படும் இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.