அக்.17.
அதிமுக 50வது ஆண்டு பொன்விழாகரூர் மாவட்ட கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில் விழா நடைபெற்றது. நிர்வாகிகள் காளியப்பன், கண்ணதாசன் , திருவிகா, நெடுஞ்செழியன், ஜெயராஜ், பாண்டியன், தானேஷ், திருநாவுக்கரசு, கிருஷ்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தந்த ஒன்றிய, நகர செயலாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.