டிச.1.
அதிமுக செயற்குழுக் கூட்டம் தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள வைத்தியலிங்கம், முனுசாமி முன்னிலை வைத்தனர் .
அதிமுக தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு ஓபிஎஸ் இபிஎஸ் பொன்னாடை அணிவித்தனர். சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுக மாவட்ட செயலர் கூட்டத்தில் அன்வர் ராஜாவுக்கும் சிவி சண்முகத்திறகும் கடும் மோதல் ஏற்பட்டது.
செல்போன் கொண்டு செல்ல தடை
இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கூட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். உரிய முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவிப்பது. விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சியைக் கட்டிக் காத்து எதிர்காலத்தில் வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.