மார்ச்.26.
ஈரோடு தொகுதி எம்பி தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்தபோது சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் ஆற்றல் அசோக்குமார் சொத்து மதிப்பு ரூ.583 கோடி என தெரிவித்துள்ளார். வங்கி கணக்கில் சுமார் ரூ.7 கோடி உள்ளது. இவரது மனைவி சொத்து மதிப்பு ரூ. 47 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவி இருவரிடமும் தலா 10 கிலோ தங்க நகை மற்றும் வீடுகள் அலுவலகங்கள் காலி மனைகள் குறித்து பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.