செப்.29.
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யூரியா 1618 மெட்ரிக் டன்னும், டிபி 394 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 640 மெட்ரிக் டன்னும். என்பிகே. 1912 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 4564 மெடன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நெற்பயிர் சாகுபடிக்காக IR 20. CO 50 CR 1009, ADT 53, ADT 54. BPT 5204. TKM 13. 20மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள்,கம்பு கோ 8 ஆகியவை 20 மெட்ரிக்டன்னும். பயிறு வகை பயிர்கள் உளுந்து VEN-8&VEN 10. கொள்ளு 2. துவரை கோ-718. ஆகியவை 15 மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை தரணி கோ-6 கோ-7, டி.எம்.லி 14 என் டிசம் வி7 ஆகியவை 15மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது.
கரூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652.20 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு செப்டம்பர் வரை 347.61 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோன்று செப்டம்பர் மாதம் முடிய 6.429 ஹெக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி உரிய முறையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கலெக்டர் தெரிவித்தார்.